Asianet News TamilAsianet News Tamil

பெண் குழந்தைகளை எவனாவது தொட்டால் … உடனே கூப்பிடுங்க இந்த நம்பருக்கு ..! அரசு அதிரடி அறிவிப்பு

கரூரில் பள்ளி மாணவி பாலியல் தொந்தரவால், தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தையடுத்து, பெண்குழந்தைகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதாக கருதினால் , தயங்காமல் 1098 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார்

karur girl sucide
Author
Karur, First Published Nov 21, 2021, 6:47 PM IST

”பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணா நான் தான் இருக்கனும் இந்த பூமியில் வாழ ஆசைப்பட்டேன்.ஆனா, இப்ப பாதியிலேயே போறேன்” என்று கடிதம் எழுதி வைத்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவி, நீண்ட நேரமாகியும் வெளியில் வராமல் இருந்துள்ளார். சங்தேகமடைந்த , அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டி சென்று பார்த்த போது, மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த சிறுமியின் தாயிக்கு தகவல் கொடுத்துள்ளார். மகள் தூக்கில் தொங்குவதை பார்த்த தாய் கதறி அழுதுள்ளார். பின்னர், வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு, மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், போலீசாரின் விசாரணையில்,மாணவி தன்னுடைய டைரியில் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.karur girl sucide அந்த கடிதத்தில், 'sexual harrasment ஆல சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை. ஆனா முடியவில்ல. i love you amma, சித்தப்பா, மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன், மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது. சாரி மச்சான் சாரி' என குறிப்பிட்டு, ஹார்ட்டின் படத்தையும் வரைந்து, கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வன்முறையால் பெண்குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வேதனையானது. பாலியல் வன்கொடுமை செய்யக்கூடிய நபரே குற்றவாளி .எனவே பாதிப்புக்குள்ளான பெண்குழந்தைகள் எந்தவிதத்திலும் தங்களுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திகொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். உங்கள் மீதோ அல்லது உங்கள் தோழிகள் மீதோ பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டால் நீங்கள் அச்சப்படவோ,அல்லது தனிமைபடுத்திக்கொண்டு தற்கொலை முடிவு எடுக்கவோ அவசியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தயக்கமின்றி எங்களை தொடர்புக்கொள்ளலாம். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட '1098' என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார். மேலும் பெண் குழந்தைகள் உதவிகளுக்கு '89033 31098' என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என  அறித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios