அரவக்குறிச்சி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாற்றுதிறனாளி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தேனி மாவட்டம் குன்னூர் அன்னை இந்தியா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (20). இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டிங் வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிக்கைக்காக இருவரும் நேற்று இருசகக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அரவக்குறிச்சி அருகே தெத்துப்பட்டி பிரிவு அருகே நேற்றிரவு சென்றப்போது எதிரே அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான செல்லதுரை (50) அவர் மனைவி லதாவுடன் 3 சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மூவரையும் அரவக்குறிச்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவக் கல்லூரி கொண்டு செல்லும் வழியில் செல்லதுரை உயிரிழந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேல்சிகிச்சைக்காக வினோத் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற இளைஞரும், மாற்றுத்திறனாளியும், அவர் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.