Asianet News TamilAsianet News Tamil

குடும்பத்தை பார்க்க ஆசை ஆசையாக ரயில் வந்த ராணுவ வீரர்; தவறி விழுந்து பரிதாப பலி - கரூர் ரயில் நிலையத்தில் சோகம

கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

army man killed who fell down from train in karur railway station vel
Author
First Published Mar 13, 2024, 5:10 PM IST

கரூர் ரயில்வே நிலையத்தில் நாள் தோறும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற இராணுவ வீரர் ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கட்டண படுக்கையறை - அமைச்சர் தகவல்

ரயில் இன்று மதியம் கரூர் வந்தடைந்த நிலையில் ரயில் சிறிது நேரம் நின்றிருந்தது.  அப்போது கீழே இறங்கி விட்டு மீண்டும் ரயிலில் ஏறும்போது பாஸ்கர் தடுமாறி கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பாஸ்கர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படியில் பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் பலி! இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்? அரசை கேள்வி கேட்கும் ராமதாஸ்

இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் பாஸ்கரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உடற்கூறு ஆய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios