Asianet News TamilAsianet News Tamil

நாட்டைக் கூறு போட்டு கொள்ளை அடிப்பதில் நிபுணர்கள்: கருரில் கர்ஜித்த அண்ணாமலை

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியபோது எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Annamalai takes a dig at opposition parties in Karur Meeting
Author
First Published Jul 1, 2023, 9:34 PM IST

பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை கரூரில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

கூட்டத்தில் பேசும்போது, காவிரி பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணியை விமர்சித்த அண்ணாமலை, அவர் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று டி.கே. சிவகுமார் அவர்களைச் சந்தித்து மேகதாது அணை கட்டுவதைக் கைவிடுமாறு ஏன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அதைச் செய்ய முடியாதபோத ஜோதிமணி எதற்கு எம்.பி. பதவியில் இருக்கிறார் என்ற அண்ணாமலை, திமுக மேகதாது அணைக்கு எதிராக கர்நாடகவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றும்  கூறினார்.

மணிப்பூருக்கு நான் கேரண்டி! அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தில்லான அறிவிப்பு

பீகார் மாநிலம் பாட்னாவைத் தொடர்ந்து கர்நாடகாவின் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 13-14 தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர முயற்சி செய்யும் எதிர்க்கட்சிகளை அண்ணாமலை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

2004ஆம் ஆண்டும் இதே போன்ற கூட்டம் நடந்தது. இதே நபர்கள் இதே போலதான் அமர்ந்திருந்தார்கள். தேர்தலுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மன்மோகன் சிங்கை பிரதமர் என்று அறிவித்தார்கள். அதை வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்ட கூட்டணிக் கட்சிகள் நாட்டைக் கூறுபோட்டு விற்றார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார். திமுக ஒரு லட்சம் கோடி ஊழல் செய்வதற்காக மூன்று துறைகளை வாங்கியது என்றும் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் நாட்டைக் கூறு போட்டு கொள்ளை அடிப்பதில் நிபுணர்கள் என்று சாடினார்.

பொது சிவில் சட்டம் பற்றி பேசிய அண்ணாமலை, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 44 பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்வதாகவும் அம்பேத்கர் அதனை ஆதரித்தார் என்றும் சுட்டிக்காட்டிப் பேசினார். பிரதமர் மோடி நம்பர் ஒன் பிரதமராக இருக்கிறார் என்றும் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நம்பர் ஒன் ஆக இருக்கிறார், அது எதில் என்பது உங்களுக்கே தெரியும் என்று கூறினார்.

பொதுமக்கள் 2024ஆம் ஆண்டில் 2004இல் இருந்தது போன்ற ஆட்சி வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகவும் பாஜகவை 450 தொகுதிகளில் வெற்றிபெறச் செய்து அறுதிப்பெரும்பான்மையுடன் மோடியை பிரதமர் ஆக்குவதில் மக்கள் உறுதியாக உள்ளதாவும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

ஒருநாள் ஊக்கை விழுங்கிவிட்டேன்... கொளத்தூரில் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட முதல்வர்

Follow Us:
Download App:
  • android
  • ios