கடனுக்கான தவணை தொகையை செலுத்தாத பெண்ணை வீடு புகுந்து தாக்கிய தனியார் வங்கி ஊழியர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழுவாக பெறப்பட்ட கடனுக்கு முறையாக தவணை கட்டவில்லை எனக் கூறி தனியார் வங்கி ஊழியர்கள் பெண்ணை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

woman attacked by private bank employees for not paying a loan amount kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கக்கோட்டுவிளை பகுதியை சேர்ந்த சுகுமரி (வயது 50). இவர் குழித்துறை அருகே பழவார் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் இருந்து ஒரு குழுவாக இணைந்து கூட்டாக கடன் பெற்று சுமார் மூன்று ஆண்டுகளாக மாத தவணை முறையில் கடனை அடைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இம்மாத தவணை கடன் தொகை செலுத்த இரு தினங்கள் தாமதமானதாக கூறி வங்கி மேலாளர் முத்து என்பவர் குழித்துறை அருகே சுகுமரியை வழி மறித்து தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் கௌதம் மற்றும் ராஜேஷ் ஆகிய இரண்டு பேரை சுகுமாரியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வீட்டுக்கு சென்ற ஊழியர்கள் இருவரும் சுகுமாரி தவணை கடன் பணம் எடுத்து வீட்டின் வெளியே வரும் முன்னதாக இருவரும் வீட்டிற்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி சுகுமாரியை சரமாரியாக தாக்கி மிரட்டிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. 

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி; விரக்தியில் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தந்தை தற்கொலை

இதில் முகம் மற்றும் கால்களில் காயம் அடைந்த சுகுமாரி குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த களியக்காவிளை காவல் துறையினர் சுகுமாரி அளித்த புகாரின் பேரில் வங்கி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வங்கி ஊழியர்கள் கௌதம் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் தலை மறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

ஷேர் ஆட்டோ பணிகளின் கவனத்திற்கு; மதுரையில் பெண் பயணியிடம் நகை பறிப்பு - ஓட்டுநர் கைது

குமரி மாவட்டத்தில் இது போன்று பல பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் பல பெயர்களில் சட்ட விரோதமாக இயங்கி வரும் தனியார் வங்கிகள் ஏழை மக்களை குறி வைத்து வீடு வீடாக சென்று அதிக வட்டிக்கு கடன் வழங்கி விட்டு சில தினங்கள் கடன் தவணை செலுத்த சில தினங்கள் தாமதம் ஆகி விட்டால் அதிக வட்டி வாங்குவதும் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்து செல்வதும் வாடிக்கையாக உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்ற வங்கிகளை காவல்துறை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios