ஊசி போட்ட சில விநாடிகளில் மகன் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. உடலை பார்த்து கதறல்...!
நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட சில விநாடிகளில் மகன் கண்முன்னே தாயார் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட சில விநாடிகளில் மகன் கண்முன்னே தாயார் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா(50). இவர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டு அதற்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 3 -ம் தேதி கொரோனாவிவிருந்து குணமடைந்த சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்தனர். இன்று வீடு திரும்ப இருந்த நிலையில், அந்த பெண்ணுக்கு செவிலியர் ஊசி போட்டுள்ளார். சில வினாடிகளில் சந்திரிகா துடிதுடித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. தாய் அழைத்து செல்ல வந்த மகன் கண்முன்னே தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அனீஷ் செவிலியரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, 'இப்படி சாவுறது எல்லாம் இங்கே சகஜம்தான்' என்று அந்த செவிலியர் தெனாவட்டாகவும், அலட்சியமாக பதிலளித்துள்ளார். தன் தாய் மரணத்துக்கு செவிலியரின் அலட்சியமே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் அனீஷ் புகாரும் அளித்தார். மேலும், ஆசாரிப்பளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக அனீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- என் தாயாரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். அப்போது, செவிலியர் போட்ட ஊசியால் என் கண் முன்னரே துடிதுடித்து இறந்தார். என் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று கண்ணீர் மல்க கூறினார்.