விமான தரத்தில் சொகுசு... தேஜஸ் ரயில் சேவையை தொடங்கிய பிரதமர் மோடி..!

சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் 22 சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த ரயில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

tejas express train..PM Narendra Modi start

சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் 22 சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த ரயில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில்  மதுரை – சென்னை இடையேயான அதிவிரைவு சொகுசு ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய பாம்பன் இணைப்பு பாலம் கட்டுவது உள்ளிட்டவைகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். tejas express train..PM Narendra Modi start

இந்த தேஜஸ் விரைவு ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் சொகுசு ரயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டது. மொத்தம் 15 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஒரு உயர் வகுப்புப் பெட்டியும், 2 டீசல் ஜெனரேட்டா் பெட்டிகளும் உள்ளன. tejas express train..PM Narendra Modi start

ஒவ்வொரு இருக்கையின் பிற்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்இடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள் இடம் பெற்றுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios