பள்ளி மாணவிகளிடம் கண்ட இடத்தில் கைது வைத்து பாலியல் சீண்டல்.. வசமாக சிக்கிய தலைமையாசிரியர்..!
நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக நித்திய லட்சுமணவேல் பணியாற்றி வந்தார். இவர், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பாலியல் சீண்டல்
நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக நித்திய லட்சுமணவேல் பணியாற்றி வந்தார். இவர், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
தலைமையாசிரியர்
இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சமூக நலத்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து, தலைமை ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டு வந்தது.
கைது
இந்நிலையில், மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த பள்ளி தலைமையாசிரியர் நித்தியலட்சுமணவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் ஏற்கனவே நாகர்கோவிலில் உள்ள மற்றொரு அரசு பள்ளியில் பணியாற்றியபோதும் இதுபோன்ற புகாருக்கு ஆளானவர் என்று கூறப்படுகிறது.