புற்றுநோயாளியின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் பங்கு தந்தை; குமரியில் உறவினர்கள் கதறல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பிரச்சினை செய்யும் பங்குதந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் தர்ணா போராட்டம்.

Relatives of Kanyakumari are protesting for permission to bury the body of cancer victim vel

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பிள்ளை தோப்பு என்னும் ஊரைச் சேர்ந்தவர் ரேவிதா(வயது 42). இவரது குடும்பத்தாருக்கும், ஊர் தரப்பினருக்கும் இடையே கழிப்பிடம் கட்ட குழி தோண்டியதால் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ரவிதா நேற்று மரணம் அடைந்தார். 

இன்று அவரது உடலை பிள்ளை தோப்பு பகுதியில் அடக்கம் செய்ய ஊர் பங்கு தந்தை மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் ஊரில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள்  நாகர்கோவில் வந்து ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு பிணத்தை அடக்கம் செய்ய இடையூறு செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் உடனடியாக பிணத்தை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios