கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகள்; குமரியில் பொதுமக்கள் ஆவேசம்
கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இறைச்சி கழிவுகளுடன் வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.
கேரளா மாநிலத்தில் இருந்து கோழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் எலட்ராணிக் கழிவுகளை லாறிகளில் ஏற்றிவந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக எல்லைகளில் காவல்துறையினரின் சோதனைச் சாவடிகளில் பெயரவிற்கு சோதனைகள் நடந்தாலும் கழிவுகளை ஏற்றிவரும் லாறிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
மாறாக சட்டவிரோதமாக வரும் லாரி ஓட்டுநர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு கழிவுகளை ஏற்றிவரும் லாறிகளை அனுமதிப்பதால் தமிழக எல்லையோர பகுதிகளில் கழிவுகள் கொட்டபடுவது அதிகரித்துவருகிறது. இந்தநிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றிய லாறி ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அழிகியண்டபம் வழியாக சென்று கொண்டிருந்தது.
விருதுநகரில் 15 வயது சிறுமியை அம்மாவாக்கிய நபர் போக்சோவில் கைது
வாகனத்தில் இருந்து தூர்நாற்றும் வீசிய நிலையில் அழிகியமண்டபம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கழிவுகளை ஏற்றிவந்த லாறியை மடக்கிபிடித்தனர். தொடர்ந்து ஓட்டுநருடன் லாறியை தக்கலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆரல்வாய்மொழி பகுதியில் கொட்டுவதற்காக கழிவுகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாறியை பறிமுதல் செய்து ஓட்டுநர்அபிஜித்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.