மு.க. ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல்... வெட்டி வீழ்த்துவோம் என ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு!
பல்வேறு மாநிலங்களும் அமித் ஷாவுக்கு எதிராகக் கொந்தளித்தன. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், சமூக ஊடங்களில் இந்திக்கு ஆதரவான எதிரான கருத்துகள் பகிரப்பட்டன. சமூக ஊடங்களில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
"இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!” என்று ஃபேஸ்புக்கில் கருத்திட்ட பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த இந்தி தின நிக்ழ்ச்சியில் பேசிய பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்றும், இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியிருந்தார். அவருடைய கருத்து சர்ச்சையானது. பல்வேறு மாநிலங்களும் அமித் ஷாவுக்கு எதிராகக் கொந்தளித்தன. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், சமூக ஊடங்களில் இந்திக்கு ஆதரவான எதிரான கருத்துகள் பகிரப்பட்டன. சமூக ஊடங்களில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார் என்பவர், இந்தி மொழியை ஆதரித்து கருத்து பகிர்ந்திருந்தார். ஆனால், அந்தக் கருத்து கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இருந்தது. அவருடைய பதிவில், “இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!” என்று தெரிவித்திருந்தார். அவருடைய இந்தப் பகிர்வு சமூக ஊடங்களில் பெரும் அளவில் விமர்சனத்துக்கு ஆளானது.
இந்நிலையில் நட்டாலம் சிவின்குமார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக சார்பில் மார்த்தாண்டம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார், சிவின்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.