Asianet News TamilAsianet News Tamil

Vande Bharat: சென்னை - நாகர்கோவில் - சென்னை; வந்தேபாரத் ரயிலை தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை

சென்னை - நாகர்கோவில் - சென்னை இடையே இன்று இயக்கப்பட்ட சிறப்பு வந்தேபாரத் ரயில் சேவையை நாள்தோறும் வழங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

passengers request vande bharat train should operate between nagercoil and chennai on daily basis vel
Author
First Published Jan 4, 2024, 5:11 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும், கன்னியாகுமரி மாவட்டம் வழியாகவும் சென்னைக்கு தினமும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில்,  குருவாயூர் விரைவு ரயில், அந்த்யோதயா விரைவு ரயில் போன்ற தினசரி ரயில்களும், வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து ரயில்களிகளிலும் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விடுவதோடு, நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வரும் நிலை தான் தினமும் இருக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்கள், விடுமுறை காலங்கள், விழாக்காலங்கள் போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலைதான் தொடர்ந்து நீடித்து  கொண்டிருக்கிறது.

Covid JN.1: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று; சென்னையில் ஒருவர் பலி

இதனால்தான் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், ரயில் பயணிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் இருந்து தற்போது தினமும் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் அல்லது நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து வியாழக்கிழமை தோறும்  நாகர்கோவிலில் இருந்து வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் வந்தே பாரத்  ரெயில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.

திருப்பூரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் படுகொலை

கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 46 ரயில்கள் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்கு 13 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் வந்தே பாரத் ரயில் 9 மணி நேரத்தில் சென்னை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு பகல் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடைந்தது. 40 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை இரவு 11.45 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரெயிலில் 7 சேர்கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் சேர்கார் பெட்டியும் இணைக்கப்பட உள்ளன. இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு கடந்த வாரத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios