Asianet News TamilAsianet News Tamil

பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி வழக்கில் திருப்பம்; குற்றவாளியின் நண்பர் ராஜா சிங் கைது!

நாகர்கோயில் காசி வழக்கில் தொடர்புடைய நபர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், விமானத்தில் நாடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர்.

Nagercoil Kasi Case: Raja Singh arrested after three years sgb
Author
First Published Apr 27, 2024, 10:52 PM IST

ஏராளமான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோயில் காசி வழக்கில் தொடர்புடைய நபர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவர் நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் கைதானதாக போலீசார் கூறியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி என்ற சுஜின். உடற்பயிற்சி மூலம் தன் உடலை கட்டுக்கோப்போடு அழகாக மெருகேற்றி பராமரித்து கொண்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பள்ளி,  கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் திருமணம் ஆன பெண்கள் என ஏராளமான பெண்களோடு சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகி தனது காம வலையில் வீழ்த்தியுள்ளார்.

காதலிப்பது போல் நடித்து அவர்களை தனியாக அழைத்துச் சென்று தனது காம பசிக்கு இரையாக்கியதோடு அவர்களிடமிருந்து பணம், நகைகள், பொருட்கள் என ஏராளமானவற்றை சுருட்டி சில ஆண்டுகள் சொகுசாக உலா வந்தான். ஒரு கட்டத்தில் நாகர்கோயில் காசியின் மோசடிக்கு இரையாகி பணம், பொருட்கள்,  என அனைத்தையும் இழந்ததோடு காசியால் மிரட்டப்பட்டு அச்சத்தில் தவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் போலீசிடம் சிக்கிய நாகர்கோயில் காசியின் அந்தரங்க லீலைகள் ஒவ்வொன்றாக அம்பலமாக துவங்கின.

ஏசி இல்லாமலேயே அறையை குளுகுளுவென்று மாற்றலாம்! இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

இவ்வாறு இவரிடம் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அளித்த புகாரின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தோண்ட தோண்ட புதையல் போல ஏராளமான தகவல்களும் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான விபரங்களும் வெளியான நிலையில் காசி மீது கவனத்தை அதிகப்படுத்திய காவல்துறை இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஒரு இளம் பெண்ணை காரில் கடத்திச் சென்று நாகர்கோயில் காசி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் அவருடன் மற்றொரு இளைஞரும் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக அந்த இளம் பெண் கூறியிருந்தார். மேலும்,  காசியின் செல்களுக்கு அவனது தந்தை தங்க பாண்டியனும் துணை போனது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அதை ஒட்டி இந்த வழக்கில் நாகர்கோயில் காசி, அவனது நண்பன் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ராஜா சிங், காசியின் தந்தை தங்கபாண்டியன் ஆகிய மூவர் மீது நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர் நாகர்கோயில் காசியும் தந்தையும் கைதான நிலையில் அவனது நண்பன் ராஜா சிங் போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

ஆனால், ராஜா சிங் துபாய் நாட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் துபாயில் டிரைவராக வேலை பார்த்து வந்த ராஜா சிங் தாயகம் திரும்பும் தகவல் குறித்து சேகரித்த நிலையில் ராஜாசிங் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி ரகசியமாக சென்னையில் தங்க திட்டமிட்டு தாயகம் திரும்பும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜா சிஐ சிபிசிஐடி போலீசா கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் நாகர்கோயில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் ஆஜர் படுத்திய பின்பு ராஜா சிங் நாகர்கோயில் சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்க போன் டிஸ்ப்ளேயில் பச்சை கலர்ல கோடு தெரியுதா? இலவசமாவே ஸ்கிரீனை மாத்திக்கலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios