காதலிக்க நான் தகுதியானவ இல்ல.. காதலனுக்கு போனில் வீடியோ அனுப்பிவிட்டு நர்சிங் மாணவி தற்கொலை..!
காதல் பிரச்சினையில் காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் பிரச்சினையில் காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் அந்தோணி இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் , இவருக்கு நிபியா (21 ) என்ற மகளும் எக்ஸெல் 11 வயது மகனும் உள்ளனர். நிபியா ஏர்வாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக இருந்து வருகிறார்.இந்நிலையில், நிபியாவிற்கு பல ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது பல பேருடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் தக்கலை அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஜோ என்பவருடன் நட்பு ஏற்பட்டு நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே நிபியா தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பழகியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நிபியா காதலனுக்கு போன் செய்து நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். மேலும், வீட்டில் தூக்கு மாட்ட கயிறுபோடும் வீடியோவையும் பதிவு செய்து காதலன் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த காதலன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, நாகர்கோவிலில் உள்ள நண்பர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் நிரியாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். நிபியாவின் பாட்டி வீட்டிற்கு சென்று ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, நிபியா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.
இதுதொடர்பாக உடனே ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிபியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் சோதனை செய்த போது கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அதில், என்னைப் பற்றி தெரிந்தும் என்னை காதலித்தாய் ஆனால் என்னால் மாற முடியவில்லை நான் செய்த தவறுகளை திருத்திகொள்ள முடியவில்லை. உன்னை காதலிக்க நான் தகுதியானவள் இல்லை என்றும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் அதில் எழுதி வைத்துள்ளார். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.