பெட்ரோல் விலை உயர்வால் தமிழக எல்லையில் குவியும் கேரளா வாகனங்கள்
கேரளாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் உள்ள தமிழக பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கேரள வாகனங்கள் குவிந்து வருகின்றன.
கேரளா அரசு சமீபத்தில் அறிவித்திருந்த பட்ஜெட்டில் மாநில வாரியாக பெட்ரோல் டீசலுக்கு மீண்டும் இரண்டு ரூபாய் உயர்த்தப்படும் என்று தெரிவித்து இருந்தது. அந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் 107 ரூபாயில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 109 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. 96 ரூபாயாக இருந்த டீசலின் விலை 98 ரூபாயாகஉயர்ந்துள்ளது.
ஆனால், தமிழக, கேரளா எல்லையான கன்னியாகுமரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103.87 ரூபாயாகவும், டீசலின் விலை 95.50 ரூபாயாகவும் விற்கப்பட்டு வருகிறது. இதை அறிந்து தமிழக - கேரளா எல்லைப்பகுதியான பாறசாலை, களியக்காவிளை மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கேரள மக்கள் தற்போது கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி பகுதிக்கு வந்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றனர்.
கோவையில் மது போதையில் கல்லூரி மாணவர் குத்தி கொலை!!
இதனால் குமரியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக பெட்ரோல் பம்புகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகளில் வருபவர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றனர்.
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த சூர்யா, ஜோதிகா
அதேசமயம், எல்லைப் பகுதியில் உள்ள கேரள பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.