Heavy Rain: இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் பொளந்து கட்டப்போகும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை தொடங்கிய மழை இடைவிடாமல் நேற்று இரவு வரை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை பெருமளவு குறைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை தொடங்கிய மழை இடைவிடாமல் நேற்று இரவு வரை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை பெருமளவு குறைந்துள்ளது.
காரைக்காலுக்கு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் சென்னைக்கு அருகே நேற்று இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மிதமான காற்று வேகத்தில் கரையை கடந்தது.தாழ்வு மண்டலம் ஆழ்ந்து தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாறமலே கரையை கடந்தது. இதனால், வடதமிழ்நாட்டில் காற்றுடன் மிக கனமழை பெய்தது. நேற்று மாலை 3 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது. அதன்பின் இரவு வரை விடாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் கொஞ்சம் மழை விட்டுள்ளது. ஆனாலும் சாலைகளில் தேங்கி உள்ள நீர் இன்னும் வடியவில்லை.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கன்னியாகுமரியில் பெய்த தீவிர மழையானது அவுட் ஆப் சிலபஃஸாக வந்துள்ளது. அதிலும், வரைப்படங்களின் படி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யும். தெற்கு கேரளா, கன்னியாகுமரி மண்டலத்தில் கனமழை பெய்யும். சென்னையில் திடீரென தீவிர மழை பெய்தது போல மீண்டும் சில இடங்களில் இங்கும், அங்கும் ஏற்படும், பருவமழை காலம் என்பதால் இப்படி மழை பெய்யும். ஆனால் இதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை பதிவிட்டுள்ளார்.