அடிப்பாவி.. 2வது முறையாக கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த தொழிலதிபரின் மனைவி.. அழுது புலம்பும் கணவர்.!

வீட்டில் இருந்த மனைவி சோனியா காந்திக்கு செல்போன் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வருவதாக கணவரிடம் கூறிசென்ற மனைவி வீடு திரும்பவில்லை. விசாரித்த போது மீண்டும் கள்ளக்காதலன் மனோஜ் என்பவருடன் மீண்டும் சோனியா காந்தி சென்றது கணவருக்கு தெரியவந்தது. 

illegal love...Businessman wife, boyfriend 2nd time escape

தொழிலதிபரின் மனைவி 2 பிள்ளைகளை தவிக்க விட்டு பணம் மற்றும் நகையுடன் கள்ளக்காதலுடன் மீண்டும் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் கனியன்விளை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (41). பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சோனியாகாந்தி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இரவு வீட்டில் இருந்த சோனியா காந்தி, அவரது மகள் ஆகிய 2 பேரையும் திடீரென காணவில்லை. இதேபோல் வீட்டில் இருந்த சொகுசு கார், பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை, ரூ.13 லட்சம் ஆகியவையும் மாயமாகி இருந்தது.

illegal love...Businessman wife, boyfriend 2nd time escape

இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 2 மாதங்களை கடந்த நிலையிலும் மாயமான தாய், மகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மனைவி, மகளை கண்டுபிடித்து தருமாறு மோகன்ராஜ் மதுரை நீதிமன்றத்தில் ஹேபியர் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் காதலனுடன் சோனியா காந்தி இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் கோவாவில் இருப்பதாக கிடைத்து விரைந்து சென்றார்கள். ஆனால் எந்த தகவலும் கிடைக்காமல் திரும்பி வந்தனர். 

illegal love...Businessman wife, boyfriend 2nd time escape

இதனிடையே, டெல்லியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று கள்ளக்காதலுடன் இருந்த சோனியா காந்தி, அவரது மகள் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு கணவருடன் சோனியா காந்தி செல்வதாக கூறினார். அதன்படி கணவர் மோகன்ராஜ் உடன் சோனியா காந்தியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்த மனைவி சோனியா காந்திக்கு செல்போன் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வருவதாக கணவரிடம் கூறிசென்ற மனைவி வீடு திரும்பவில்லை. விசாரித்த போது மீண்டும் கள்ளக்காதலன் மனோஜ் என்பவருடன் மீண்டும் சோனியா காந்தி சென்றது கணவருக்கு தெரியவந்தது. 

illegal love...Businessman wife, boyfriend 2nd time escape

இதையடுத்து மோகன்ராஜ் மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். தனது மனைவி 2 பிள்ளைகளையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாள். 12 பவுன் தாலி செயின், ரூ.10 ஆயிரத்துடன் அவளை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அழுது புலம்பி உள்ளார். மோகன்ராஜியின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தான் மனோஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios