நாகர்கோவிலில் கணவர் இறந்த சோகம் தாங்காமல் தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் கணவர் இறந்த சோகம் தாங்காமல் தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் ரஞ்சித்குமார் (32) இவரது மனைவி ராசி (28). கோவை மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அக்க்ஷயா (5), அனியா (3) என்ற இரு மகள்கள். இந்நிலையில், நாகர்கோவில் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்த ரஞ்சித்குமார், கடந்தாண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறந்தார். பின்னர் ராசி தனது மாமனார் மாமியாருடன் தொடர்ந்து வசித்து வந்தார்.

கணவர் இறந்ததால் வருமானம் இல்லாமல் மாமனார் கூலிவேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். மேலும் கணவர் இறந்த சோகத்தில் இருந்த ராசி கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. குழந்தைகளும் அப்பாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் தவித்து வந்தன. இந்நிலையில், கடந்த 17ம் தேதி ரஞ்சித் குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. 

இந்நிலையில், இன்று காலை தனது இரு மகள்களுக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்த ராசி, தானும் தூக்கமாத்திரையை சாப்பிட்டதுடன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் மற்றம் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது குழந்தைகள் மயக்க நிலையில் இருந்ததையடுத்து அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். 

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.