குமரியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை... ஆறுகளில் வெள்ளப்பெருக்கு... மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தி இருக்கிறது.

Heavy rains in Kanyakumari district due to atmospheric circulation sgb

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மைலாடியில் 103.02  மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 2178  கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தி இருக்கிறது.

வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் அது புயலாக மாறியுள்ளது இந்த புயலுக்கு ரமேல் என பெயரிடபட்டு உள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் ஏற்பட்டுள்ளது.

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 6 குழந்தைகள் பலி; 12 பேர் காயங்களுடன் மீட்பு

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக மைலாடியில் 103.02  மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை   மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 4258 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால்  அணையிலிருந்து வினாடிக்கு 2178  கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்திருக்கிறது. மாம்பழத்தாறு பகுதியில் 85 மில்லி மீட்டர் மழையும், ஆணைகிடங்கில் 84 மில்லி மீட்டர் மழையும், பாலமோரில் 82 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

மூணு நாளில் உயிரைக் கொல்லும் ஆபத்தான வைரஸ்! சீன ஆய்வகத்தில் நடக்கும் விபரீத விளையாட்டு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios