எங்கள் மருத்துவமனையை குறைசொல்வதா? கேரளா மருத்துவமனைக்கு எதிராக அமைச்சர் ஆவேசம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை குறை கூறி தகவல் பதிவிட்ட கேரள தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுகள் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் புற்றுநோய் அதிகமாக உள்ள ஐந்து மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலாவதாக 14 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்படுகிறது. இதற்கான கதிர் இயக்க பாதுகாப்பு அதிகாரி பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கட்டுமான பணிக்கான கட்டிடம் கட்டும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஸ்கிரீனிங் சோதனை கருவி அடுத்த மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான தாய்ப்பால் வங்கி, நவீன தீவிர பாதுகாப்பு சிகிச்சை மையம் போன்றவற்றிற்காக தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் மோதலை தடுக்கச்சென்ற கர்ப்பிணியின் கணவர் படுகொலை; காவல்துறை விசாரணை
எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைக்கு நாய்கடி மருந்து கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு நாய்க்கடி பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கு நாய்க்கடிக்கான சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன் பின் குழந்தைக்கு கேரளா மாநில தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு குழந்தை காப்பாற்ற பட்டதில் கேரளா மாநில மருத்துவர்கள் தங்களை விளம்பரப்படுத்தியுள்ளனர்.
எதற்காக அவர்கள் சமூக வலைதளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் தாழ்த்தி பதிவிட்டுள்ளனர்? இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கேரளா சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பிய போது ஆத்திரம் அடைந்த அமைச்சர் செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டார்.