தாலி கட்டும் நேரத்தில் ஒதுங்கி ஒதுங்கி போன மாப்பிள்ளை திடீரென ஓட்டம்.. பல கனவுகளுடன் இருந்த மணப்பெண் அதிர்ச்சி
நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்னதாக மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது.
நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்னதாக மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது.
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பின்னர் 26-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்றன.
நேற்றுமுன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகளும் நிறைவு பெற்றன. இதனையடுத்து, மண்டபத்தில் விருந்தோம்பல்
நடைபெற்றது. பல கனவுகளுடன் மணமகளும், உற்சாகமாக உறவினர்களை வரவேற்றபடி இருந்தார். இந்நிலையில், அந்த சமயத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாப்பிள்ளையை காணவில்லை. வெகுநேரமாகியும் அவர் வராததால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வீட்டாரும், என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு தான், திருமணம் மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது.