கன்னியாகுமரியில் அதிர்ச்சி... மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
கன்னியாகுமரியில் உள்ள மனநல காப்பத்தில் 46 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள மனநல காப்பத்தில் 46 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம்புதூர் என்ற இடத்தில் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை நடத்தி வரும் நிர்வாகிக்கு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது.
இதையடுத்து உடனடியாக அவர் நடத்தி வரும் மனநல காப்பகத்தில் இருந்த 80-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 46 மனநல நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.