குமரியில் திருவள்ளுவர், விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலம்; பணிகள் துவக்கம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியது
சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுவதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். கடல் சீற்றம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து பல நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.
ஒரு இட்லியை 1 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்கும் உணவகங்கள் - வாடிக்கையாளர் குற்றச்சாட்டு
இதன் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 30 கோடி மதிப்பில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று அதிகாரிகள் அதிரடி விசாரணை
இந்தப் பணியை சென்னையைச் சேர்ந்த பிரபல தனியர் கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இணைப்பு பாலத்திற்கான முதற்கட்ட பணியாக இன்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை எடுத்து சென்னையில் உள்ள ஐஐடிக்கு அனுப்பி பாறைகளின் உறுதி தன்மையை சோதனை செய்யும் பணியானது இன்று துவங்கியது.