குடிமகன்களால் போர்க்களமான மண்டபம்; மயங்கிய மணப்பெண்ணை தூக்கிக்காண்டு ஓடிய மாப்பிள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருமண விருந்தில் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் அடிதடி. மணப்பெண் மயக்கமடைந்த நிலையில்,  திருமண மண்டபத்தில் ஜன்னல் கண்ணாடிகளும், சேர்களும் உடைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை.

clash between bridal gown and bridal man family in kanyakumari district

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மறவன்குடியிருப்பு  பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்  அதே பகுதியைச் சேர்ந்த மணமகணுக்கும், ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்த மணமகளுக்கும்  இன்று திருமணம் நடைபெற்று அதற்கான விருந்து உபசரணை  இரவில் நடைபெற்றது. அப்போது மணமகள் வீட்டாரின்  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் மது போதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். 

மேலும் அங்கு நின்றிருந்த மணமகணின் உறவுக்கார பெண்கள் மீது மோதியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன்  வீட்டை சேர்ந்தவர்கள் குத்தாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களை  அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருமண மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் இருக்கைகளையும்  அடித்து உடைக்கப்பட்டன. 

“எங்க ஏரியா உள்ள வராத” காட்டுக்குள் சென்ற நபரை துரத்தியடித்த யானை; தலைதெறிக்க ஓட்டம் பிடித்த பயணி

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த கோட்டார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மணப்பெண் மயக்கமடைந்து விழுந்தார். பின்பு அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மணமகன் தன் தோளில் சுமந்து கொண்டுசென்றார். இதனால்  திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

விண்ணப்பத்தில் கையெழுத்து சரியில்லை என படிவத்தை கிழித்து விவசாயி முகத்தில் வீசிய அதிகாரி

தொடர்ந்து பெண் வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால் மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் என்ன சொன்னாலும் கேட்டு கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் எனவும் சிலர் சத்தமிட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த 6 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios