நாகர்கோவில் அருகே கால்வாயில் அரசு பேருந்து கவிழ்ந்து 3பேர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இரவு 10 மணியளவில் அரசு பேருந்து (4 சி) ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் டேவிட் ஆன்டனி ஓட்டி வந்தார். நடத்துநர் பத்மகுமார் மற்றும் இரு பயணிகள் இருந்தனர். இறச்சகுளம் பெட்ரோல் பல்க் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்ற வாகனத்தை பேருந்து ஓட்டுநர் முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த சுமார் 10 அடி ஆழம் கொண்ட கால்வாயில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இரு பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அந்த பகுதி பொதுமக்கள் பூதப்பாண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் அதிஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மணல் கொள்ளையை தடுத்த விஏஓ கொலை! எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்
விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். சம்பவம் குறித்து பூதப்பாண்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து கால்வாயில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.