கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருக்கிறது கோட்டாறு கிராமம். இந்த ஊரைச் சேர்த்தவர் சதீஷ். தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஆண்டோவிஜி. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கால்நடைதுறை அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார். இந்த தம்பதியினருக்கு ஆண்டோசப்ரின் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 12 வயது சிறுவனான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால் சிறுவன் ஆண்டோசப்ரின் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். தாயின் சேலையை எடுத்து வீட்டின் மின்விசிறியில் தொட்டில் கட்டி சிறுவன் விளையாட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் கழுத்தில் சேலை இறுக்கியுள்ளது. இதில் மூச்சுத்திணறி சிறுவன் அலறியிருக்கிறான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டனர்.

பின் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தாயின் சேலையில் தொட்டில் கட்டி விளையாடி நிலையில் கழுத்து இறுகி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!