Asianet News TamilAsianet News Tamil

நாகர்கோவில் ரயில் நிலைய வடமாநில ஊழியர்களின் பொறுப்பற்ற பேச்சால் விழி பிதுங்கும் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையங்களில் வடமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவதால் தினமும் பயணிகளுடன் வாக்குவாதம். பயணிகளை ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

argument between passenger and north indian workers in nagercoil railway station
Author
First Published Feb 24, 2023, 5:43 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத், கேரளா, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எட்டு பயணச்சீட்டு கவுண்டர்கள் உள்ள நிலையில் 3 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் வட மாநிலத்தவர்களாக இருப்பதும் பயணிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக டிக்கெட் அல்லது முன்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு வட மாநில ஊழியர்களால் சரியான பதிலை சொல்ல முடிவதில்லை. 

இதனால் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இது போன்ற வட மாநில ஊழியர்கள் பயணிகளிடம் மரியாதையை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே ரயில்வே துறை அதிகாரிகள் வட மாநில ஊழியர்களை பணியமருத்துவதை தவிர்த்தால் இது போன்ற பிரச்சினைகளுக்கு இடம் இருக்காது என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios