2 மகள்களுடன் தாய் வாய்க்காலில் விழுந்து தற்கொலை.. மூத்த மகள் உயிர் தப்பியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்.!
இரவு தூங்கிக்கொண்டிருந்த தீபக் எழுந்து பார்த்தபோது, மனைவியும், இரு மகள்களும் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கணவர் மற்றும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது, கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் ஸ்கூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக 2 மகள்களுடன் தாய், வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், மூத்த மகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக். இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்தில் இருந்து இவர் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு மதுநிஷா (12), தருணிகா(6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையும் படிங்க;- நள்ளிரவில் செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து..! மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த வாலிபர்..!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனவேதனை அடைந்த விஜயலட்சுமி அவரது அண்ணன் ராமசாமிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ அனுப்பினார். அதில், எனக்கு வாழ பிடிக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜயலட்சுமி தனது 2 மகள்களையும் ஸ்கூட்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். பின்னர், கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தனது 2 குழந்தைகளை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார்.
இரவு தூங்கிக்கொண்டிருந்த தீபக் எழுந்து பார்த்தபோது, மனைவியும், இரு மகள்களும் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கணவர் மற்றும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது, கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் ஸ்கூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்குள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் தேடினர். அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில், ஆயிபாளையம் என்ற இடத்தில் மரக்கிளையைப் பிடித்துக் கொண்டிருந்த மூத்த மகள் மதுநிஷாவை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐ.ஐ.டி. மாணவி..!
இந்த சம்பவம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு முறையினர் கீழ்பவானி வாய்க்காலில் தாய் மற்றும் மற்றொரு மகளை தேடினர். சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் தாயின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரது 2-வது மகள் தருணிகா உடலை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.