சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐ.ஐ.டி. மாணவி..!
ரயில்வே தண்டவாளத்தில் ஐஐடி மாணவி மர்மமான முறையில் சடலமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே தண்டவாளத்தில் ஐஐடி மாணவி மர்மமான முறையில் சடலமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஆவடி – இந்துக்கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று வழக்கம்போல ரயில்வே பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ரயில்வே பணியாளர்கள் உடனடியாக ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கல்லூரி மாணவி.. வெளியான பரபரப்பு தகவல்
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் இருந்த அடையாள அட்டையை வைத்து அந்த பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த பெண் ஒடிசாவைச் சேர்ந்த மேகா ஸ்ரீ(30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., முனைவர் பட்டப்படிப்பை படித்தவர் ஆவார்.
இந்நிலையில், சென்னை அடையாறு ஐ.ஐ.டி.யில் 3 மாத ஆராய்ச்சி படிப்பு பயிற்சிக்காக வந்ததாக தெரிகிறது. மேகாஸ்ரீ அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி தனது ஆராய்ச்சி படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி ரயில்வே போலீசார், ஓடும் ரெயிலில் சென்ற போது தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மாணவி மேகா ஸ்ரீ இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று ஆவடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!