பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!
அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (20). ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் அயப்பாக்கம் சாலையில் கார்த்திக் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல் கார்த்திகை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதையும் படிங்க;- முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
உயிர் பயத்தில் இவர்களிடம் தப்பிக்க முயற்சிதத்தத போது அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று காவல் நிலையம் எதிரே வைத்து தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பழிக்குப்பழியாக கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி இருகோஷ்டிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக லோகேஷ் என்ற கார்த்திக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவரான வெங்கடேஷ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த வழக்கில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் சண்முகம் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். உயிர் தப்பிய வெங்கடேஷ், தனது அண்ணன் லோகேஷ் என்ற கார்த்திக் கொலைக்கு பழிக்குப்பழியாக கைதான சண்முகத்தின் தம்பியான கார்த்திக்கை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க;- இது இருப்பதால்தானே எவளையோ தேடி போற! கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஆண் உறுப்பில் ஊற்றிய மனைவி!வலியால் அலறிய கணவர்