Asianet News TamilAsianet News Tamil

அரசு பள்ளியில் ஃபுல் மப்பில் வந்த ஹெட்மாஸ்டர்.. மாணவ, மாணவியர்கள் முன்னிலையில் என்ன செய்தார் தெரியுமா?

தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வந்தபின் 17 மாணவர்கள் இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் வாங்கி சென்று விட்டதாகவும், பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு கல்வி கற்பிக்காமல் அலட்சியமாக உள்ளார். 

Headmaster who comes to school drunk in Erode
Author
Erode, First Published Jul 20, 2022, 9:06 AM IST

அரசு துவக்கப்பள்ளியில் ஒன்றில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் வருவதாகவும், சரிவர மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அனுப்பர்பாளையம் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 51 மாணவ, மாணவியர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கடந்த மாதம் பணி மாறுதலாகி வந்த தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் என்பவர் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு வகுப்பறையில் சரிவர மாணவர்களுக்கு கல்வி கற்பிக்காமல் இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். 

இதையும் படிங்க;- அம்மா என்ன நாலு பேரு சேர்ந்து நாசம் செஞ்சுட்டானுங்க.. 10ம் வகுப்பு பள்ளி மாணவியின் நண்பர்களே கூட்டு பலாத்காரம்

Headmaster who comes to school drunk in Erode

இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, பணிக்கு வந்த தலைமை ஆசிரியர் ஜான் சேவியரை பள்ளிக்குள் நுழைய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை ஆசிரியர் திரும்பிச் சென்றார். இதைத்தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற வட்டார கல்வி அலுவலர், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க;- பெண்கள் விவகாரத்தில் ஜெயக்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா? ரகசியத்தை உடைத்த கோவை செல்வராஜ்..!

Headmaster who comes to school drunk in Erode

தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வந்தபின் 17 மாணவர்கள் இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் வாங்கி சென்று விட்டதாகவும், பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு கல்வி கற்பிக்காமல் அலட்சியமாக உள்ளதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதுது. ஆகையால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உயரதிகாரிகளிடம் பேசி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

இதையும் படிங்க;-  முடிவெட்ட சொன்ன ஹெட் மாஸ்டர்.. நேராக சென்று பூச்சி மருந்தை குடித்த பிளஸ் 2 மாணவன்..!

Follow Us:
Download App:
  • android
  • ios