காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. அரசு பெண் மருத்துவர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!
லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரி பயணித்த மருத்துவர் இந்திராணி,அவரது கணவர் தேவநாதன் மற்றும் உறவினர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பெண் மருத்துவர் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி, உடையானூரைச் சேர்ந்தவர் தேவநாதன் (53). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (51), மேட்டூரை அடுத்த வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கோவை தனியார் கிட்னி மருத்துவமனையில் கணவருக்கு சிகிச்சை சென்று விட்டு இரவு பவானி வழியாக மேட்டூர் சாலையில் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். காரை பெண் மருத்துவரின் கணவர் தேவநாதன் ஓட்டி வந்துள்ளார். இவர்களுடன் உறவினர் மகன் சத்தியசீலன் சென்றார்.
இதையும் படிங்க;- அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் திமுக.. அராஜகப் போக்கை நிறுத்துங்க.. கொதிக்கும் இபிஎஸ்.!
இந்நிலையில், கார் காடப்பநல்லூர் பிரிவில் வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரி பயணித்த மருத்துவர் இந்திராணி,அவரது கணவர் தேவநாதன் மற்றும் உறவினர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;-அடுத்து வசமாக சிக்கப்போகும் பெண் முன்னாள் அமைச்சர்.. வழக்குப்பதிவு செய்து அதிரடி காட்டும் போலீஸ்..!
இதனையடுத்து, விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஒருவழியாக காரை லாரிக்குள் சிக்கி இருந்த காரை வெளியே எடுத்தனர். பின்னர், 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல், தேனி மாவட்டம் கணவாய் மலைப்பகுதியில் தர்ம சாஸ்தா கோவில் அருகே எஸ் வடிவிலான வளைவு ஒன்று உள்ளது. காலை தேனியில் இருந்து நெல்லை நோக்கி ஒரு அரசுப் பேருந்தும் மதுரையிலிருந்து தேனி நோக்கி ஒரு அரசுப் பேருந்து எதிரெதிர் திசையில் சென்றுள்ளன.
அப்போது, அதிகவேகமாக வந்த இரண்டு பேருந்தும் இந்த எஸ் வளைவு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பேருந்துகளின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், 25க்கம் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.