மதுபோதையில் திருநங்கை மீது கொலைவெறி தாக்குதல் 1 மணி நேரத்தில் போதை ஆசாமி கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் திருநங்கையை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் 1 மணி நேரத்தில் போதை ஆசாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மைய நாயக்கனூரில் விடிவதற்கு முன்பே மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. அம்மைய நாயக்கனூர் அருகே உள்ள கொடைரோடு இரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் தினந்தோறும் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் அடிக்கடி மது வாங்கி செல்கின்றனர்.
ஒரு சிலர் அங்கேயே குடித்து விட்டு தன்னிலை மறந்துவிடுவதும் உண்டு. பாரிலிருந்து காவல்துறையினருக்கு தினந்தோறும் கட்டிங் செல்வதால் இது குறித்து கண்டு கொள்வதில்லை என கூறப்படுகிறது. திண்டுக்கல், மதுரை நெடுஞ்சாலையில் குடிமகன்கள் குடித்து விட்டு அப்படியே படுத்து விடுவதும் உண்டு.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருநங்கையும், இரண்டு ஆண்களும் நன்றாக குடித்துவிட்டு சாலையோரத்தில் சண்டை போடும் காட்சி அருகே உள்ள சிசிடிவி யில் பதிவாகி வேதனை பட வைத்துள்ளது. அந்த ஆண் நண்பர் மற்றும் திருங்கை இருவரும் போதையில் தள்ளாடுகின்றனர். அந்த ஆண் நண்பர் திருநங்கையை அடித்து காலால் மிதித்து சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்துகிறார்.
மேடை ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அமைச்சர் நேரு
தொடர்ந்து திருநங்கையை அடித்து கொண்டிருக்கும் காட்சி வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில் திருநங்கையை போதை ஆசாமி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் 1 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.