Protest: மத்திய அரசின் புதிய 3 குற்றவியல் சட்டங்களக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குற்றவியல் புதிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம். 

more than 150 advocates protest against 3 new criminal laws in dindigul vel

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா,  பாரதிய சாக்ஷயா அதிநயம் என கொண்டு வந்துள்ளது. 

இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில்  01ம் தேதியை வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்தனர். மேலும் அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகம்; திமுக.வை தகுதி நீக்கம் செய்யுங்கள் - அன்புமணி ஆவேசம்

இதனைத் தொடர்ந்து நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாம் தேதியான இன்று திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வழியாக சென்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முழுமை பெறாத அறிக்கையை வைத்து திமுக நீட் எதிர்ப்பு நாடகத்தை நடத்துகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி சென்றனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios