Asianet News TamilAsianet News Tamil

மாடு திருடி மாட்டிக்கொண்ட வடமாநில நபர்; சமயோஜித புத்தியால் 1 அடி கூட வாங்காமல் தப்பித்த சுவாரசியம்

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே பசுமாட்டை திருட முயன்று கையும், களவுமாக சிக்கிய வடமாநில நபர் பொதுமக்களிடம் அடி வாங்குவதை தவிர்ப்பதற்காக தான் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

migrant person who try to theft a cow caught red-handed in dindigul district vel
Author
First Published Jun 22, 2024, 7:00 PM IST | Last Updated Jun 22, 2024, 7:00 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே முடிமலை நாதர் கோவில் அடிவாரம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி உதயகுமார். இவர் தனது தோட்டத்தில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இன்று வழக்கம் போல் தனது பசுவை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த பசுவை பிடித்து சென்று கொண்டிருந்தார்.

இதை அவ்வழியாக வந்த உதயகுமாரின் உறவினரான நவீன் என்பவர் பார்த்து மாட்டை பிடித்து சென்ற நபரை மடக்கி பிடித்து எதற்காக மாட்டை பிடித்து செல்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் திடீரென நவீனின் கைகளை பிடித்து கடிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவரிடமிருந்து தப்பிய நவீன் கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு  உதயகுமார் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து கட்டி வைத்தனர்.

சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்பவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளுக்கு அதை செய்யுங்கள் - ரஞ்சித் ஆவேசம்

அதனைத்தொடர்ந்து வேடசந்தூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவலர் ஒருவர் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது காவலரை கண்டதும் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்றும், மது போதையில் இருப்பது போன்றும் சிலை போல் அசையாமல் நின்று நடித்து அட்ராசிட்டி செய்தார். இது அங்கு இருந்த விவசாயிகளை சிரிப்பில் ஆழ்த்தியது.

நடிகர் விஜய் பிறந்தநாள்; மதுரையில் கைவிடப்பட்ட நாய்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்

அதனைத் தொடர்ந்து போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அந்த நபரை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பினர். ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட வாலிபர் ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்றதும் திடீரென ஆம்புலன்ஸின் கதவை திறந்து குதிக்க முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவ உதவியாளர் ஆம்புலன்ஸை நிறுத்தி, அந்த பகுதியை சேர்ந்த மேலும் நான்கு பேரை ஆம்புலன்சில் துணைக்கு ஏற்றி, அந்த வட மாநில வாலிபரை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios