Watch : நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி பங்கீடு! அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன்!
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ19 லட்சம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பு அறைகள் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி தான் வாக்குகள் சேகரிக்க உள்ளோம்.
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கமா.? விடாப்பிடியாக இருக்கும் அதிமுக- நடக்கப்போவது என்ன.?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை முன்னுறுத்தி தான் வாக்குகள் சேகரிக்க உள்ளார். பிஜேபியை பொறுத்தவரை 25 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் அவர்களது எண்ணம். அதிமுக பொருத்தவரை 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது எண்ணம் எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்