காவல் அதிகாரி என கூறிக்கொண்டு கடைகளில் வசூல் வேட்டை நடத்திய போலி ஆசாமி கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் அதிகாரி என கூறிக்கொண்டு கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி நபரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

fake police person arrested by police officers in dindigul district

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவைச் சேர்ந்த கருப்பையா மகன் சரவணன் (வயது 36). இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் உள்ள கடைகளில் நான் மதுவிலக்கு காவல்துறை அதிகாரி. உங்கள் கடைகளில் பான்பராக், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தொடர்ந்து புகார் வருகிறது. 

புகார்கள் குறித்து நாள் விசரணை நடத்த வந்துள்ளேன் எனக் கூறி அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் சோதனை நடத்த ஆரம்பித்துள்ளார். கடைகளில் பான்பராக், குட்கா உள்ளிட்ட எந்தவித போதை பொருட்களும் விற்பனை செய்யப்படாத நிலையில் கடைக்காரர்களிடம் உங்கள் கடைகளில் தான் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் வந்தது. எனவே நீங்கள் எனக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். 

சென்னையில் இளம் பெண்ணை கட்டாய படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 2 பேர் கைது

இவர் மீது சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அவரது அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அவர் போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை வியாபாரிகளிடம் காட்டியுள்ளார். இது போலியான அடையாள அட்டை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட வியாபாரிகள் நத்தம் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர் காவல் அதிகாரி என கூறி  சுற்றி வந்த போலி நபரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

சேலத்தில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் வரதட்சணை கொடுமை; இளம்பெண் தர்ணா

விசாரணையில், அவர் போலி காவலர் என உறுதிப்படுத்திக் கொண்டனர். உடனடியாக குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குற்றவாளி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios