சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை: திலகபாமா காட்டம்!
சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை என திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா காட்டம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தக் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசாரத்தின்போது, ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து பிரசாரம் செய்து வருவதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை என திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா காட்டம் தெரிவித்துள்ளார்.
29 பைசா மோடி என்றால் கஞ்சா உதயநிதி என்று சொல்வோம்: அண்ணாமலை தடாலடி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தேர்தல் பிரசாரம் செய்த பாமக வேட்பாளர் திலகபாமா, “குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று சொன்ன காலம் போய், சரக்கு பாட்டிலுக்கு 'வீரன்' என்று பெயர் வைக்கும் நிலைக்கு வந்துள்ளதுதான் திமுகவின் சாதனை என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் அண்மையில் விலை மலிவான 12 புதிய சரக்கு வகைகளை அறிமுகம் செய்தது. அதில் ஒன்றாக வீரன் என்ற பெயரில் புதிய மதுபானம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்த சரக்கு பாட்டில்களுக்கு மத்தியில், வீரன் என தமிழ் பெயரில் இந்த மதுபான பாட்டில் வெளியாகியுள்ளது. பூந்தமல்லி அருகே செயல்படும் மதுபான ஆலையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் சாதாரண வகை மதுபானமான இந்த வீரனுக்கு விலை ரூ.140ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.