29 பைசா மோடி என்றால் கஞ்சா உதயநிதி என்று சொல்வோம்: அண்ணாமலை தடாலடி!

29 பைசா மோடி என்றால் கஞ்சா உதயநிதி என்று சொல்வோம் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

We can call ganja udhayanidhi if he says 29 paise modi says annamalai smp

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் விஜயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டார்.

 அப்போது பேசிய அவர், “ஈரோடு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும். எளிமையான பிரதமர் வரும்போது வளமான தமிழகத்தை கொடுக்க முடியும். மூன்று அமைச்சர்கள் இருக்கும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயித்து நல்லது செய்ய முடியுமா? தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெயித்து வரும்போது ஈரோட்டுக்கு தேவையான எல்லா விஷயங்களை செய்ய முடியும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “2024 இல் யார் பிரதமராக வருவார் என்று தெரிந்து இந்த தேர்தலில் வாக்களிக்க போகிறோம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பத்தாயிரம் மரக்கன்றுகள் நட்டு மக்கள் சேவகன் ஆகவும், ஆறு முறை பசுமை காவலன் விருது பெற்ற நபராகவும் இருக்கிறார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டின் முக்கிய பிரச்சனைகளை எழுதி கொடுத்து படிக்கிறார். 2 லட்சம் ஏக்கர் நிலத்தை மூன்று லட்சம் என முதல்வர்  பொய் சொல்கிறார்.” என சாடினார்.

Fact check கச்சத்தீவு குறித்து வைகோ உண்மையில் கூறியது என்ன? முழு விவரம்!

மேலும், “ஈரோடு மாவட்டத்திற்கு என ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவமனை நாங்கள் திறப்போம். பெரிய கட்சி, சின்ன கட்சி பார்க்காமல் எல்லோரும் வளர வேண்டும் என்பதே பாஜவின் நோக்கம். ராமதாஸ், ஜிகே வாசன், போன்ற முக்கிய தலைவர்கள் கூட்டணியில் உள்ளனர். இதுவரை பார்க்காத  தனி மனித வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.” என்றார்.

தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காமல், வரிபகிர்மானத்தை குறைத்து அளிக்கும் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், தேர்தல் பிரசாரத்தின்போது, 29 பைசா என பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, 29 பைசா மோடி என்றால் கஞ்சா உதயநிதி என்று சொல்வோம் என்றார். “இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சைக்கிள் மெதுவாக சென்றாலும் இலக்கை அடையும். இன்று சைக்கிள் சின்னம் ஒரு ஆமை தான். ஆனால், முயல் ஆமை  கதை போன்று சைக்கிள் வெல்லும்.” என கூறி அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios