கோவிலை மேம்படுத்தும் ரூ.200 கோடி திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல்... அமைச்சர் சேகர்பாபு தகவல்!!

பழனி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 200 கோடி ரூபாயிலான வரைவு திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

cm stalin approves 200 crore project to improve palani temple says minister sekar babu

பழனி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 200 கோடி ரூபாயிலான வரைவு திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வரும் ஜன. 27 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதை அடுத்து அதற்கான திருப்பணிகள் கோயிலில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனிடையே கும்பாபிஷேகத்திற்காக மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று கோயிலில் நடைபெற்றது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, பழனி கோயிலில் குடமுழுக்கு பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. 16 கோடி ரூபாயில் கற்கள் மற்றும் அலங்கார வேலைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாயில் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன பணிகள் நடைபெற்று வருகிறது. திருக்கோயில் நிதி மூலமாக 26 பணிகளும், உபயதாரர்கள் மூலமாக 62 பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விழா அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட வாழைத்தார்கள்… விழா முடிந்த பின் போட்டிபோட்டு அறுத்த மக்கள்!!

திருப்பணிகள் நிறைபெற்று ஜனவரி 27 ஆம் தேதி நல்ல முறையில் குடைமுழுக்கு நடைபெறும். பழனி முருகன் கோவிலுக்கு வருடத்திற்கு சராசரியாக ஒரு கோடியே இருபது இலட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, பழனி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 200 கோடி ரூபாயில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை துவங்குவதற்கான டெண்டர்கள் விடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios