விழா அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட வாழைத்தார்கள்… விழா முடிந்த பின் போட்டிபோட்டு அறுத்த மக்கள்!!

கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழா முடிந்த பின்னர் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள் மற்றும் இளைநீர்களை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பறிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Share this Video

கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழா முடிந்த பின்னர் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள் மற்றும் இளைநீர்களை மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பறிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதையும் படிங்க: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!

இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 20 துறைகளின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்த விழா முடிந்த பின்னர் அப்பகுதி மக்கள் விழாவிற்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்த வாழைத்தார்கள், இளநீர்களை பறித்து சென்றனர். மேலும் சில அறிவாளால் வாழைத்தார்களை வெட்டி எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Video