சுற்றுலாப் பயணிகளிடம் மீண்டும் போதை காளான், கஞ்சா விற்பனை; கேரளாவை சேர்ந்த 7 பேர் கொடைக்கானலில் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஞ்சா செடி, கஞ்சா, போதை காளான் வைத்திருந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதேபோல் காவல் துறையும் தொடர்ந்து கஞ்சா போதை, காளான் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்லும் கொடைக்கானல் நகர் பகுதி, வட்டகனல், பூம்பாறை, கவுஞ்சி, மன்னவனூர், பூண்டி கூக்கால், குண்டுபட்டி, வில்பட்டி பள்ளங்கி உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதியில் முழுவதும் போதைப் பொருட்கள் தொடர்ந்து பல்வேறு நபர்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது
இந்நிலையில் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினர் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கஞ்சா செடியுடன் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆன்ஸ் ஜே ஜோஸ், ரைஸ், அனீஸ், பீட்டர், அகில் பென்னாண்டஸ், ஜான் பேப்டிஸ்ட், ஜெய்சன் உள்ளிட்ட ஏழு நபர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு கஞ்சா செடி. சுமார் 750 கிராம் கஞ்சா. போதை காளான் கைப்பற்றப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனைத் தொடர்ந்து ஏழு பேரையும் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஏழு பேரையும் சிறையில் அடைத்தனர்.