நீதிபதியின் நாக்கை அறுப்பதாக கூறிய காங் மாவட்ட தலைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிபதி நாக்கை அறுப்பேன் என்று பேசிய மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சமூகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தாமாக பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் SC/ST பிரிவு சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசும்போது :- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்பேன் என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்
இதனையடுத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.