அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை AC வாகனத்தில் வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - தருமபுரி எம்.பி நடவடிக்கை
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை குளிரூட்டப்பட்ட வாகனத்தில் வீட்டிற்கு அனுப்பும் வகையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 புதிய வாகனங்களை மருத்துவமனைக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த பின் தாய்மார்களை அவர்களது வீட்டிற்கு நேரடியாக அழைத்து செல்வதற்காக போதிய வாகன வசதி இல்லாததால் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்து வந்தனர். அதனால் மருத்துவ துறை அதிகாரிகள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். செந்தில்குமாரிடம் வாகன வசதி ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு பரிசீலனை செய்ய அனுப்பி வைத்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டதால் தனாக முன்வந்து 2 குளிர்சாதன வசதிகளுடன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்க நடவடிக்கை எடுத்தார்.
திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு; காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
அதனடிப்படையில் அரூர் மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளுக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.48 இலட்சம் மதிப்பில் 2 குளிர்சாதன வசதியுடன் தமிழகத்தில் முதன் முறையாக தாய் சேய் வாகனத்தை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் இருந்து மருத்துவர். செந்தில் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நூற்றாண்டு பாரம்பரியமிக்க மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை இணை இயக்குனர். சாந்தி, மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவள்ளி மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.