மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி அறையில் தற்கொலை... அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள்!!
தருமபுரி அருகே மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பிரேமலதா என்ற மனைவியும் இளம்பரிதி என்ற மகனும் உள்ளனர். அவரது 20 வயதான மகன் இளம்பரிதி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். அவர் மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும்.. பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பறந்த அதிரடி உத்தரவு !!
இந்த நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு சகமாணவர்களுடன் அவர் தங்கியிருந்த மருத்துவ கல்லூரி விடுதிக்கு சென்றுள்ளார். அவரது அறையில் இருப்பவர்கள் வெளியே சென்றுவிட்டு திரும்பிய போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை தட்டிய சக மாணவர்கள் நீண்ட நேரம் கதவு திறக்கபடாததை அடுத்து கதவை உடைத்து உள்ளே பார்த்த போது இளம்பரிதி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆபாச பேச்சு... பாஜக பிரமுகர் சிறையில் அடைப்பு!!
இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பரிதியின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மாணவனின் பெற்றோர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.