முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆபாச பேச்சு... பாஜக பிரமுகர் சிறையில் அடைப்பு!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருநின்றவூர் அடுத்த கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி. 32 வயதான இவர் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆபாசமாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு.. சண்டை போடாதீங்க.! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்ன ஐடியா !
அதுமட்டுமின்றி பட்டியலினத்தவர்களை பற்றி கொச்சையாக பேசி அதனையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதனை கண்டவர்கள் அந்தவ் வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் என்பவரும் முதல்வர் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை என்று எழுதுவதற்கு பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அட்வைஸ்!
அதன்பேரில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பூபதி வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைது செய்யபட்ட பூபதி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.