சிறுமியை கற்பழித்த சிறை வார்டன் போக்சோ சட்டத்தில் கைது
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறை வார்டனை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கெண்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது சிக்களூர். இந்த பகுதியில் உள்ள பள்ளியில் 15 வயது சிறுமி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருவதால் சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் எனக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதாக சொல்லி உள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியை அழைத்து சென்ற பெற்றோர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதித்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது, அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்ற பார்த்திபன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. லெனின்குமார் (எ) பார்த்திபன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி கற்பழிக்கப்பட்டது குறித்து சிறுமியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் லெனின்குமார் என்கின்ற பார்த்திபன் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. சட்டரீதியாக என்ன செய்யலாம்? அவசர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்.!
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் மற்றும் சமூக அமைப்பினரிடையே பாதிக்கப்பட்ட எங்கள் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று ஆதரவு கேட்டனர். இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் சிறை வார்டன் லெனின் குமார் என்கின்ற பார்த்திபனை கைது செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில் சிறைவார்டன் லெனின்குமார் (எ)பார்த்திபன். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். சரண் அடைந்த சிறை வார்டனை போக்சோ வழக்கில் கைது செய்து கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.