சாலை அமைப்பதற்காக தோண்டி எடுத்து வீசப்பட்ட எழும்புக்கூடுகள்; சமாதிகளை காணவில்லை என உறவினர்கள் கதறல்
தர்மபுரி மாவட்டத்தில் சாலை அமைப்பதற்காக சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுத்து சாலையில் வீசப்பட்டதால் உறவினர்கள் கதறல்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள, இராம கொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச் சாம்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைப்பதாக கூறி, அதற்கான பணிகளை செய்துள்ளனர். ஆனால் சுடுகாட்டை தாண்டி உள்ள நிலங்களை, வீட்டுமனை யாக மாற்றி விற்பனை செய்யும் நோக்குடன், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஆதரவாக, சுடுகாட்டை மூடி மறைத்து, சவக்குழிகளின் மேல், சாலை அமைத்துள்ளதாக கூறி, இந்த ஊர் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது பெற்றோர்களின் சவக்குழிகள், காணாமல் போனதாக கூறி கதறி அழுதனர். புதிதாக போடப்பட்ட சாலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறி கிடந்தது. சுடுகாட்டை கூட விட்டு வைக்காத அரசு அதிகாரிகளின் செயல், புதுச்சாம்பள்ளியில் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஆசிரியர்கள் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மேலும் இந்த விவகாரம் குறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் காவலர் மீது சரக்கு வாகன ஓட்டுநர் தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு