பொது குழாயில் தண்ணீர் பிடித்த தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது கற்களை வீசி தாக்குதல்; தருமபுரியில் பரபரப்பு
தருமபுரி மாவட்டத்தில் பொது மின்மோட்டாரில் தண்ணீர் பிடித்த காரணத்திற்காக மாற்று சமூகத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாதனூர் கிராமத்தில் 350 க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த குப்பன் அருகில் இருக்கும் அரசு மின் மோட்டாரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இவரது மருமகள் முத்துபிரியா. ரேவதி ஆகிய இருவரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது. அருகில் வசிக்கும் தங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் பிடிக்கலாம் என குப்பன் மற்றும் அவருடைய மருமகள் இருவரிடமும் மாற்று சமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் சேதுராமன், அவரது தம்பி ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து குப்பன் மற்றும் மருமகள்கள் முத்துபிரியா, ரேவதி ஆகியோரை ஆபாச வார்த்தைகளாலும் மற்றும் சாதி பெயரை கூறி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரம் அடங்காத சேதுராமன் மற்றும் அவரது தம்பி ஆறுமுகம் செங்கற்களை கொண்டு குப்பன் மற்றும் மருமகள் முத்துபிரியா ரேவதி ஆகியோர் மீது தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு நடந்த அநீதியை கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதாவிடம் கூறியுள்ளனர்.
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்
உங்கள் கணவர் அரசு பணியில் உள்ளார். உங்களுக்கு ஏன் இந்த வேலை என்றும், மேலும் பிரச்சினைக்கு செல்ல வேண்டாம் என்று பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. கணவர் ரமேஷ் பணியிலிருந்து வீட்டிற்கு வந்த பின் தங்களுக்கு நடந்த துயரத்தை கூறினார். இதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மஞ்சுளா சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி தாக்குதலுக்கு உள்ளான முத்துபிரியா, ரேவதி ஆகியோர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சேலையில் தொட்டில் கட்டி விளையாடியபோது சோகம்; கழுத்து இறுகி சிறுவன் பரிதாபமாக பலி