Asianet News TamilAsianet News Tamil

கடலூரில் லஞ்சம் வாங்கி கல்லா கட்டும் டாஸ்மாக் ஊழியர்கள்! வைரல் வீடியோ!

டாஸ்மாக் கடையில் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகிறது. பாட்டில் கூலிங் இருந்தால் ஐந்து ரூபாய் கூடுதலாக வைத்து தான் விற்போம், இல்லையென்றால் நீங்கள் கூலிங் இல்லாமல் பாட்டிலை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர்.

Tasmac employees taking bribes in Cuddalore! Viral video sgb
Author
First Published Mar 17, 2024, 11:32 PM IST

கடலூரில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மதுபானம் வாங்க வருபவர்களிடம் லஞ்சம கேட்டு வசூல் செய்தாகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி செல்லும் வழியில் உள்ள தொட்டி மதுக்கு பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை கிராமப்புற பகுதியில் உள்ளதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிகார ஆசாமிகள் வந்து செல்கின்றனர்.

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிராமணம் செய்துவைக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகிறது. பாட்டில் கூலிங் இருந்தால் ஐந்து ரூபாய் கூடுதலாக வைத்து தான் விற்போம், இல்லையென்றால் நீங்கள் கூலிங் இல்லாமல் பாட்டிலை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறுகின்றனர்.

இந்த டாஸ்மாக் கடை கிராம பகுதியில் இயங்கி வருவதால் அந்தக் கடையில் சமூக விரோதிகளின் கூடாரமாக இயங்கி வருகிறது. கடையில் வேலை பார்க்கும் ஊழியர் தனது உறவினர்கள் மற்றும் பலரை கடையிலேயே உட்கார்ந்து மது அருந்த அனுமதிக்கிறார். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணபடுகிறது எனக் குற்றச்சாட்டு வருகிறது.

குறிப்பாக, மது வாங்க வரும் அனைவரிடமும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் அதிகமாக கொடுத்துதான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள் எனவும் புகார் வருகிறது. இந்நிலையில், அந்தக் குற்றசாட்டுக்கு ஆதாரமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

6வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! முழுமையான பயணத் திட்டம் இதோ!

Follow Us:
Download App:
  • android
  • ios